உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணக்காளருக்கு மிரட்டல்

கணக்காளருக்கு மிரட்டல்

தேனி : குள்ளப்புரம் வேளாண் கல்லுாரி கணக்காளர் ஸ்டெல்லா கிரேஸ் மேரி 42. இவர் பெரியகுளத்தில் இருந்து தனது சகோதரர் பாஸ்கரின் டூவீலரில் கல்லுாரிக்கு வந்து சென்று வந்தார். ஜூலை 11ல் கல்லுாரி முடிந்து குள்ளப்புரம் பொம்மிநாயக்கன்பட்டி செல்லும் வழியில் இருவரும் டூவீலரில் வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 4 நபர்கள், டூவீலரை வழிமறித்து கணக்காளரையும், அவரது வாகனத்தையும் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டினர். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ