உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கள்ளச்சாராய மரணம்: தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

கள்ளச்சாராய மரணம்: தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

தேனி : கள்ளச்சாராய மரணத்திற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டித்து தேனியில் இரு இடங்களில் தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தேர்தல் பணிக்குழுத் தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். கள்ளச்சாரய விற்பனையை கண்டு கொள்ளாத தி.மு.க., அரசு, முதல்வர் ஸ்டாலினை கண்டித்து கோஷமிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதியிடம் மனு வழங்கினர். மாவட்டப் பொருளாளர் மாயி, அவைத் தலைவர் முகமது, தேனி நகரச் செயலாளர் முருகராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கலெக்டர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., அரசை கண்டித்தும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலசுந்தர்ராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் வேல்மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி