| ADDED : மே 29, 2024 05:26 AM
மூணாறு, : இடுக்கி மாவட்டம் பைசன்வாலி காக்காகடை அருகே சுற்றுலா வேன் வீட்டிற்குள் புகுந்து கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி இறந்தார். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.கர்நாடகா மாநிலம் தும்பூர் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டு செம்மண்ணார், கேப் ரோடு வழியாக சென்றனர். பைசன்வாலி அருகே காக்காகடை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு இறக்கத்தில் சென்றபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள சசியின் வீட்டினுள் புகுந்தது. அப்போது சசியின் மனைவி, மகன் ஆகியோர் வெளியில் சென்ற நிலையில் வீட்டினுள் சசியும், நண்பரும் பேசிக் பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார். எனினும் வேனில் வந்த சுற்றுலா பயணி ஜீவன்கவுடா 34, இடிபாடுகளில் சிக்கி இறந்தார். பலத்த காயம் அடைந்த சுற்றுலா பயணிகள் 11 பேரை ஆலுவாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நான்காவது முறை: செம்மண்ணார், கேப் ரோட்டில் பைசன்வாலி அருகே காக்காகடை பகுதியில் கடும் இறக்கத்தில், கடும் வளைவு உள்ளது. அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. அங்கு சசியின் வீடு ரோட்டோரம் உள்ளது. ஏற்கனவே சசியின் வீட்டினுள் மூன்று முறை வாகனங்கள் புகுந்து விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.