உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காங். ஆர்ப்பாட்டம்

காங். ஆர்ப்பாட்டம்

தேனி : காங்கிரஸ் கட்சி 2017 முதல் 2021 வரை வருமான வரிக்கணக்கை முறையாக தாககல் செய்யவில்லை என்பதால், வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1823.08 கோடி செலுத்த அறிவுறுத்திய மத்திய வருமானவரித்துறை, மத்திய அரசை கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் அபுதாஹிர், நகரத் தலைவர் கோபிநாத், மாநில பொதுககுழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செய்தி தொடர்பாளர் சன்னாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்., தலைவர் பிரின்ஸ், வட்டாரத் தலைவர்கள் முருகன், சுதாகர், அம்சாமுகமது, ஜீவா, சத்தியமூர்த்தி, நகரத் தலைவர்கள் முஷாக்மந்திரி, பழனிமுத்து, ஜெயராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி