உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிலாளர் நலத்துறை வணிகர்கள் ஆலோசனை

தொழிலாளர் நலத்துறை வணிகர்கள் ஆலோசனை

தேனி, : வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள், பணியாளர்களை பாதுகாப்பது பற்றி தொழிலாளர் நலத்துறையினர், வணிகள் ஆலோசனைக்கூட்டம் பூதிப்புரத்தில் நடந்தது. தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட வணிகள் சங்க பேரமைப்பு தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். கடைகள் வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதியை உறுதிபடுத்துதல், பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு நேரம், இருக்கை வசதி, தங்குமிடம் ஏற்படுத்துதல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி