உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 14 பூத்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுப்பதிவு: தேனி வாக்காளர்களிடம் ஆர்வம் குறைவு

14 பூத்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுப்பதிவு: தேனி வாக்காளர்களிடம் ஆர்வம் குறைவு

தேனி: லோக்சபா தேர்தலில் 50 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டு பதிவான ஓட்டு சாவடி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதில் தேனி நகர்பகுதியில் 8 ஓட்டுச்சாவடிகள் ஓட்டளிக்க வாக்காளர்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது.மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டசபை தொகுதிகள் தேனி லோக்சபா தொகுதியில் இடம் பெறுகின்றன. தமிழகத்தில் ஏப்.,19ல் லோக்சாபா தேர்தல் நடந்தது.மாவட்டத்தில் 1225 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றில் பெரியகுளம் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி எண்கள் 108, 266, 270, 282, 291, 292, 293, 295, ஆண்டிப்பட்டியில் 311, போடியில் 5, 14, 100 ஆகிய 12 ஓட்டுச்சாவடிகளில் 50 முதல் 40 சதவீத ஓட்டுகள் பதிவாகியது. பெரியகுளம் தொகுதியில் 294, ஆண்டிபட்டியில் 309 ஓட்டுசாவடிகளில் 40 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இதில் தேனி நகர்பகுதியில் உள்ள 8 ஓட்டு ஓட்டு சாவடிகளில் 50 சதவீதத்திற்கு குறைவாக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு பதிவு செய்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் தொடர் விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது.2026 சட்டசபை தேர்தலில் கூடுதல் ஓட்டுகள் பதிவாகும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளின் நிலை அலுவலர்களுடன் இந்த மாதத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து விழிப்புணர்வு பணி துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ