உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுபானங்கள் பதுக்கியவர் கைது

மதுபானங்கள் பதுக்கியவர் கைது

மூணாறு, : கேரளா, எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜூசபாஸ்டின் 54. மூணாறு அருகே வட்டவடை, கொட்டாக்கொம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கள்ளச்சாராயம் காய்ச்சியும், மது பானங்களையும் சட்டவிரோதமாக விற்பனை நடத்தி வந்தார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் பிஜூசபாஸ்டின் வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்திருப்பதாக கலால்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர் வசித்த வீட்டில் இடுக்கி கலால்துறை உதவி இன்ஸ்பெக்டர் நெபு தலைமையில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 8 லிட்டர் மதுபானம், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவை சிக்கின. அவற்றை பறிமுதல் செய்து பிஜூசபாஸ்டினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை