உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகசூல் குறைவு: விலை உயரும் வெற்றிலை

மகசூல் குறைவு: விலை உயரும் வெற்றிலை

சின்னமனூர்: கடும் வெப்பம் காரணமாகவும், மழை இல்லாததாலும் வெற்றிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்து வருகிறது .-தேனி மாவட்டத்தில் சின்னமனூர், மார்ககையன்கோட்டை, சீலையம்பட்டி, கம்பம், பெரியகுளம், வடுகபட்டி, ஜெய மங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெற்றிலை சாகுபடி உள்ளது. பெரியகுளம் பகுதியில் வெள்ளை வெற்றிலையும், சின்னமனூர் பகுதியில் கருப்பு வெற்றிலையும் சாகுபடியாகிறது. நடவு செய்த 100 நாட்களில் பறிக்க துவங்கலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை ஆண்டிற்கு 12 முறை பறிக்கலாம்.இந்தாண்டு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மழை இல்லை. மேலும் அதிக வெப்பம் நிலவியது. இதனால் கொடிகள் காய்ந்து மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏக்கருக்கு 1200 கிலோ வரவேண்டிய நிலையில் தற்போது 300 கிலோ வரத்து உள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது . கருப்பு வெற்றிலை கிலோ ரூ.250 , வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.310 என உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் விலை உயர்ந்துள்ளது. இன்னமும் விலை உயரும் என்று விவசாயிகள் மதிப்பீடு செய்கின்றனர்.இது தொடர்பாக வெற்றிலை சாகுபடியாளர் ரவி கூறுகையில், மழை இல்லாததால் மகசூல் கடுமையான சரிவை சந்திதது வருகிறது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. வெற்றிலை இல்லாததால், இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபத்தை தராது. மழை பெய்தால் மட்டுமே மகசூல் அதிகரிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ