உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுப்பதிவு தாமதத்திற்கு இயந்திரங்களே காரணம்

ஓட்டுப்பதிவு தாமதத்திற்கு இயந்திரங்களே காரணம்

மூணாறு: கேரளாவில் ஓட்டு பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மூலம் ஓட்டு பதிவில் கால தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.கேரளாவில் 20 லோக்சபா தொகுதிகளில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஒரு சில சிறிய சம்பங்கள் தவிர ஓட்டுபதிவு அமைதியான முறையில் நடந்தது. அதே சமயம் ஓட்டு பதிவுக்கான கால அவகாசம் மாலை 6:00 மணிக்கு முடிந்த பிறகும் 1500க்கும் அதிகமான ஓட்டுச் சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு ஓட்டளித்தனர். அதற்கு ஓட்டு பதிவு இயந்திரங்களின் செயல்பாடு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.ஓட்டளிக்கும் நபர் சின்னத்தின் பட்டனை அழுத்தியதும் ஏழு வினாடிக்கு பிறகு தான் 'பீப்' சப்தம் கேட்கிறது. அதனை அனுசரித்து ஓட்டு பதிவு நடந்ததால் மந்தமான சூழல் நிலவியது. பகலில் வெப்பம் அதிகரித்ததால் மாலையில் அதிகமாக வந்தனர். அதனால் கடந்த தேர்தல்களில் இல்லாத அளவு மாலை 6:00 மணிக்கு பிறகு ஓட்டு பதிவு நடந்தது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை