உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மஞ்சளாறு அணை முதன் முறையாக 78 நாட்கள் 55 அடியாக உயர்ந்து சாதனை: தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

மஞ்சளாறு அணை முதன் முறையாக 78 நாட்கள் 55 அடியாக உயர்ந்து சாதனை: தேனி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

தேவதானப்பட்டி: முதன்முறையாக மஞ்சளாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து 78 நாட்கள் 55 அடியாக உயர்ந்துள்ளதால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பாசன கிணறுகளில் நீர் மட்டம் உயர்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது.முருகமலை, வறட்டாறு, இருட்டாறு, தலையாறு, பெருமாள் மலை பகுதிகளிலும், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி நீர் தேக்கப்படும். அணையில் 435 மி.கன அடிநீர் உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர் வரத்து உள்ளது.இதனை அப்படியே ஒரு கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.மஞ்சளாறு அணையில் 1967ல் விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை திறந்து 57 ஆண்டுகளில் முதன்முறையாக வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே கடந்த ஜூன் 20 முதல் நேற்று செப்.5 வரை 78 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்து நிலை நிறுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும். மலைப்பகுதியில் பெய்யும் சாரல் மழையால் இரு கண் மதகு வழியாக 70 நாட்களாக உபரி நீர் கால்வாயில் வெளியேறுகிறது. இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பாசன கிணறுகளுக்கு ஊற்று நீர் கிடைத்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி