| ADDED : மே 29, 2024 04:28 AM
கம்பம், : மழைக்கால காய்ச்சல் தடுப்பிற்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முன்வர வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் மாறி உள்ளது. குறிப்பாக வெப்பம் இல்லாமல், வானம் மேக மூட்டமாக காட்சி தருகிறது. இதமான தென்றலும் வீசுகிறது.தொடர் மழை மற்றும் திடீர் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக ஆங்காங்கே காய்ச்சல் தாக்கம் தெரிகிறது. குறிப்பாக கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த சுகாதாரத்துறை முன் வர வேண்டும். மேலும் சித்தா, ஆயுர் வேதா மற்றும் இதர துறைகள் மூலம் நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கும் முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கபசுர குடிநீர் பொடி, நிலவேம்பு பொடிகளை பொதுமக்களுக்கு வழங்கி , வீடுகளில் காய்ச்சி குடிக்க அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.