உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நுாதன கறிக்கோழி வளர்ப்பு திட்டம்; கூடுதல் இயக்குனர் ஆய்வு

நுாதன கறிக்கோழி வளர்ப்பு திட்டம்; கூடுதல் இயக்குனர் ஆய்வு

கம்பம்: 'நுாதன கறிக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிகள் கோழிகளை எவ்வாறு வளர்க்கின்றனர்' என்று கால்நடை பராமரிப்பு துறையின் மாநில கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.இத்துறையின் மாநில கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் நேற்று தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். தப்புக்குண்டு கிராமத்தில் மாதிரி வரைவு திட்டத்தின் கீழ் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடக்கிறதா என ஆய்வு செய்தார். தேசிய கால்நடை முகமையின் கீழ் நுாதன கறிக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 200 பேர் கறிக்கோழி வளர்த்து வருவதை ஆய்வு செய்தார். தொடர்ந்து சின்னமனுார் மருந்தகத்தில் அதிக வெப்பம் காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கரைசல் வழங்கினார். மாநில எல்லையில் பறவை காய்ச்சல் தடுப்பு கண்காணிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது தேனி இணை இயக்குனர் கோயில்ராஜா, உதவி இயக்குனர்கள் கப்ரமணியன், சிவரத்னா அன்பழகன், பாஸ்கரன் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர் கால்நடை டாக்டர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய கலந்துரையாடலில் பங்கேற்று ஆய்வு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ