உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாய்களை கட்டுப்படுத்துவதில் நகராட்சிகள் அலட்சியம்

நாய்களை கட்டுப்படுத்துவதில் நகராட்சிகள் அலட்சியம்

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 3, 5, 6 வது வார்டுகளில் கடந்த 6 நாட்களில் தெரு நாய்கள் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதேபோல் 20வது வார்டு கே.ஆர்.ஆர்., நகரில் மூன்று பெண்களை நாய்கள் கடித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆபத்து விளைவிக்கும் வகையில் நாய்கள், செல்லப்பிராணிகளை தெருக்கள், பூங்காக்கள், பொது இடங்களில் விடக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். ஆனால் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் மக்களுக்கு தொந்தரவு அளித்து அச்சுறுத்தும் நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ