உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் தேசிய விண்வெளி தினம்

கல்லுாரியில் தேசிய விண்வெளி தினம்

பெரியகுளம்: பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். செயலர் சாந்தாமேரி ஜொசிட்டா, பேராசிரியை பாத்திமா மேரி சில்வியா முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறை தலைவர் அருள்மொழி வரவேற்றார். திருவனந்தபுரம் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பேராசிரியர் அசோக், இந்தியாவின் நிலவின் பயணம், சந்திராயன்-3 யை குறித்து பேசினார். பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு அறிவியல் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இயற்பியல் துறை துணை பேராசிரியை ஜூலியட் கிறிஸ்டினா மேரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை