உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே குறும்பபட்டி லாரி டிரைவர் வடிவேல் 45. இவர் தற்போது சீதாராம்தாஸ் நகரில் வசிக்கிறார். நேற்று முன்தினம் சொந்த ஊரான குறும்பபட்டியில் தனது தாய் ராமாயி அம்மாள் 74, உறவினர்களை பார்க்க சென்றார். அன்று மாலையில் வீசிய பலத்த காற்றில் அவர்களது ஆட்டுக்கொட்டகை அருகே மின் கம்பத்திலிருந்து பக்கத்து வீட்டிற்கு செல்லும் மின் ஒயர் அறுந்து விழுந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின் ஒயர் மீது ராமாயி அம்மாள் மிதித்ததால் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். வடிவேல் புகாரில் கண்டமனுார் விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி