உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூத் சிலிப் வழங்கும் பணி ஏப்.,13க்குள் முடிக்க உத்தரவு

பூத் சிலிப் வழங்கும் பணி ஏப்.,13க்குள் முடிக்க உத்தரவு

தேனி : தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தேனி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 1225 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 11.20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டுச்சாவடிகள், வாக்காளர் விபரங்கள் அடங்கிய பூத் சிலிப் வழங்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா துவங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கப்பட்டன. அவர்கள் மூலம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன. பி.எல்.ஓ.,க்கள் வாக்காளர்களிடம் வினியோகித்து வருகின்றனர். பூதிப்புரம், ஆதிப்பட்டி பகுதிகளில் பூத் சிலிப் வழங்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார். மேலும் யாரிடமும் மொத்தமாக பூத்சிலிப்களை வழங்க கூடாது, வாக்காளரிடம் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். பயிற்சியில் கூறியதை பின்பற்ற வேண்டும்' என அறிவுறுத்தினார். இப்பணிகளை ஏப்.,13க்குள் முடிக்கஉத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ