உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பனை விதைகள் விதைப்பு விழா

பனை விதைகள் விதைப்பு விழா

தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் பசுமை இயக்கம், விருதுநகர் டாங்கோ கிரீனேஜ் இயக்கத்துடன் இணைந்து, இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் 1000 பனை விதைகளை விதைக்கும் விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு வரவேற்றார். நிகழ்வில் விருதுநகர் சிவனேஷ்குமார், 1000 பனைவிதைகளை கல்லுாரிக்கு அளித்தார். ஏற்பாடுகளை கல்லுாரி பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் சுசிலா செய்திருந்தார். முதல்வர் சித்ரா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை