உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் ரோட்டோர கடைகளை அகற்ற ஊராட்சி நடவடிக்கை

மூணாறில் ரோட்டோர கடைகளை அகற்ற ஊராட்சி நடவடிக்கை

மூணாறு: மூணாறில் ஆபத்தான நிலையில் ரோட்டோரங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு ஊராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் கடந்த ஒருவாரமாக பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதனால் பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் பிறபகுதிகளை விட மூணாறில் மழை அதிகம் பெய்வது வழக்கம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆபத்தான நிலையில் ரோட்டோரங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.அது போன்று ஆபத்தான நிலையில் உள்ள கடைகளை இன்று மாலைக்குள் அகற்றுமாறு ஊராட்சி செயலர் நோட்டீஸ் அளித்தார். அல்லாத பட்சத்தில் ஊராட்சி சார்பில் கடைகள் அகற்றப்படும். அதற்கான செலவை சம்பந்தப்பட்டவரிடம் இருந்து வசூலிக்கப்படும் எனவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ