உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இன்றி பயணிகள் அவதி; நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இன்றி பயணிகள் அவதி; நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளதால், பயணிகள் தண்ணீர் இன்றி அவதிக்கு உள்ளாகுகின்றனர்.தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் 3 பிளாட்பாரங்கள் உள்ளன. இந்த பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட போது பல லட்சங்கள் செலவு செய்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் பிளாட்பாரம் மேல்தளத்தில் அமைக்கபட்டது. அங்கிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு 3 பிளாட்பாரங்களுக்கும் செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்து. 3 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவை கடந்த பல வருடங்களாகவே செல்படாமல் உள்ளன.சில மாதங்களுக்கு முன் நகராட்சி சார்பில் மதுரை, திண்டுக்கல் பஸ்கள் புறப்படும் பகுதியில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது.அதில் நகராட்சி சார்பில் தண்ணீர் நிரப்பபட்டு வந்தது. ஆனால் தற்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகளுக்கு நகராட்சி குடிநீர் கிடைக்காமல் கடைகளில் பணம் கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கோடைகாலத்தை சமாளிக்க உடனடியாக தொட்டிகளில்குடிநீர் நிரப்பி சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ