உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மஞ்சளாறு அணையில் 2ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

மஞ்சளாறு அணையில் 2ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

தேவதானப்பட்டி : கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. முருகமலை, வரட்டாறு, இருட்டாறு, தலையாறு ஆகிய பகுதிகளிலும், மஞ்சளாறு நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்துள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி மட்டுமே நீர்த்தேக்க முடியும். கோடை மழையால் மே 17ல் அணை நீர் மட்டம் 44.30 அடியாகவும், மே 18ல் 46 அடியாகவும், மே 24 ல் 44.90 அணியாகவும், மே 25 ல் 50.30 அடியாகவும், மே 29 ல் 50.95 அடியாகவும் படிப்படியாக உயர்ந்தது.மே 30 ல் 51 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. ஜூன் 3ல் 52.10 அடியாக உயர்ந்தது.நேற்று (ஜூன் 5ல்) மாலை 5:00 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 99 கன அடி நீர் வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியது. இதனால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி