உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பருவ மழை துவங்கும் முன் மேகமலை அணைகளில் பராமரிப்பு முடிக்க திட்டம்

பருவ மழை துவங்கும் முன் மேகமலை அணைகளில் பராமரிப்பு முடிக்க திட்டம்

கம்பம்: மேகமலையில் உள்ள அணைகளில் பராமரிப்பு பணிகளை பருவ மழை துவங்குவதற்கு முன் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமாக உள்ள மேகமலையில் ஹைவேவிஸ் அணை , மணலாறு அணை, வெண்ணியாறு அணை, இரவங்கலாறு அணை என பல சிறிய அணைகளை கட்டி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹைவேவிஸ் அணையிலிருந்து சுரங்க பாதை வழியாக தண்ணீர் இரவங்கலாறு அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.அங்கிருந்து வண்ணாத்தி பாறை வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுருளியாறு மின் நிலையத்திற்கு தண்ணீரை இறக்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது.ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நடைபெறும் மின் உற்பத்தி நிலையமாகும். தற்போது அணைகளில் நீர்மட்டம் முழுவதும் குறைந்துள்ளது. எனவே தற்போது அணைகளில் தண்ணீர் திறக்கும் கதவுகள், ஸ்கவர் வால்வுகள் என பல இடங்களில் பராமரிப்பு பணிகளை துவக்கி உள்ளனர்.இது தொடர்பாக மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்குமுன்னதாக அணைகளில் பராமரிப்பு பணிகளை முடித்து விட திட்டமிட்டு பணிகளை துவங்கி உள்ளோம். ஷட்டர் பகுதிகளில் உள்ள புதர்களை அகற்றுவது, ஷட்டர்களை சரி பண்ணுவது, கிரீஷ் அடிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ