உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் உதவி மையம் மூடல்

போலீஸ் உதவி மையம் மூடல்

தேவதானப்பட்டி: ஜி. கல்லுப்பட்டியில் போலீஸ் உதவி மையத்திற்கு போலீசார் வராமல் பூட்டியே உள்ளது.தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதியில் சில தினங்களாக விவசாய நிலங்களில் மின் மோட்டார்கள், ஒயர்கள் திருட்டு சில்லறையில் மது விற்பனை, கஞ்சா விற்பனை, மணல் திருட்டு என பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.இரவு ரோந்து போலீசார் வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.கெங்குவார்பட்டி, ஜி. கல்லுப்பட்டி இரு ஊர்களிலும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கும் வகையில்ஜி. கல்லுப்பட்டியில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. முந்தைய காலங்களில் 24 மணி நேரமும் போலீசார்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரச்னைகள் கட்டுக்குள் இருந்தது. தற்போது காவல் உதவி மையத்திற்கு போலீசார் வருவது இல்லை. இதனால் உதவி மையம் பூட்டியே உள்ளது.காவல் உதவி மையம் மீண்டும் 24 நேரம் செயல்படும் வகையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி