உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

மது பதுக்கிய மூவர் கைதுதேனி:அல்லிநகரம் வெங்கலா நகர் கோயில் தெரு கார்த்திக் 36. இவர் ரூ.860 மதிப்புள்ள 6 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்து, பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அல்லிநகரம் வெங்கலா கோயில் தெரு கர்ணன் 42. இவர் ரூ.3500 மதிப்புள்ள 25 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.தேனி: தும்மக்குண்டுவை சேர்ந்த அன்பு 47. இவர் வைகை ஆற்றுப்பாலம அருகே ரூ.1540 மதிப்புள்ள 11 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினார். வருஷநாடு போலீசார் கைது செய்தனர்.மண்டை உடைப்புதேனி: சுருளிபட்டி நேருஜி காலனி ராஜா 40. இவர் அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்றார். தேனியை சேர்ந்த கருப்பசாமி அப்பகுதியில் நின்றிருந்தார். அவரிடம் ராஜா, என் வீட்டின் முன் நின்று ஏன் அசிங்கமாக பேசினீர்கள் எனக் கேட்டார். அதற்கு ஆத்திரமடைந்த கருப்பசாமி, தான் இடுப்பில் வைத்திருந்த பாட்டிலால் ராஜாவின் தலையில் தாக்கி ரத்தக்காயத்தை ஏற்படுத்தினார். ராஜா புகாரில் ராயப்பன்பட்டி எஸ்.ஐ., கண்ணன் விசாரிக்கிறார்.செய்முறையை குறைத்தஉறவினருக்கு மூக்குடைப்புதேனி: சுருளிபட்டி சந்திரபாபு 47. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த முருகன். இவர் தனது விசேஷத்திற்கு சந்திரபாபு, செய்முறை மொய் குறைந்து வைத்துவிட்டதாக கூறி அசிங்கமாக பேசினார். பின் சுருளிபட்டி மெயின் ரோடு வனத்துறை பங்களா அருகில் நின்றிருந்த சந்திரபாபுவை கல்லால் மூக்கிலும், இடது கையிலும் தாக்கி ரத்தக்காயத்தை ஏற்படுத்தினார். பாதிக்கப்பட்ட சந்திரபாபு ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். ராயப்பன்பட்டி போலீஸ் எஸ்.ஐ., கண்ணன், முருகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ