| ADDED : மே 12, 2024 04:02 AM
கேமராக்கள் சேதம்: விசாரணைதேனி: வடபுதுப்பட்டி குபேரன் நகர் செல்வராஜ் 60. இவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக கோவைக்கு மே 3ல் சென்றார். மே 9ல் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து இருந்தது. அதன் பதிவுகளை பார்த்த போது, ஒரு குல்லா அணிந்து சுவர் ஏறி குதிப்பது பதிவாகி இருந்தது. மேலும் கேமராக்களை பழுதாக்கியது தெரியந்தது. செல்வராஜ் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.டிராக்டர் மோதி தொழிலாளி பலிதேனி: உப்புக்கோட்டை மணிகண்டன் 33, கூலி தொழிலாளி. இவர் குச்சனுார்- உப்புக்கோட்டை மெயின் ரோட்டில் டூவீலரில் வந்தார். டூவீலரில் இவருக்கு பின்னால் முத்துத்தேவன்பட்டி செல்லபாண்டி44, அமர்ந்திருந்தார். டூவீலர் குண்டல்நாயக்கன்பட்டி அரசுப்பள்ளி அருகே வந்தபோது எதிரே கோடங்கிபட்டி முருகன் 27, ஓட்டிவந்த டிராக்டர் மோதியது. இதில் காயமடைந்த மணிகண்டன்,செல்லபாண்டி இருவரும் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் செல்லப்பாண்டி மருத்துவமனையில் இறந்தார். மணிகண்டன் மனைவி ராணி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.11 பேர் மீது வழக்குதேனி: கோடங்கிபட்டி செல்லாயி அம்மன் கோயில் தெரு கணேசன் 55, விவசாயி. அதே தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், லோடு மேன். இருவர் குடும்பத்திற்கும் தகராறு இருந்தது. மணிகண்டன் குடும்பத்தினர் தாக்கியதாக கணேசன் புகாரில் மணிகண்டன், மனைவி மகாலட்சுமி உட்பட 6 பேர்மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். மணிகண்டனின் 17 வயது மகள் புகாரில் கணேசன் குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரு குடும்ப தகராறில் தாக்கி கொண்டது, கொலைமிரட்டல் உள்ளிட்டவழக்குகளில் 11 பேர் மீது பழனிசெட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.டூவீலர் மோதி சிறுமி காயம்தேனி: சீப்பாலக்கோட்டை மாரிமுத்து30. இவரது மகள் வர்ஷாஸ்ரீ 5. மாரிமுத்து வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் கடை நடத்தி வருகிறார். வர்ஷாஸ்ரீ ரோட்டை கடக்கும் போது சின்னஓவலாபுரம் இந்திராகாலனி அருண்பாண்டி ஓட்டிவந்த டூவீலர் மோதியது. காயமடைந்த சிறுமிக்கு வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்குசேர்க்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.