உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பா.ஜ.,வினர் மீது வழக்குதேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.,வினர் மீது வி.ஏ.ஓ., ஜீவா தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்படி பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன், நகரத் தலைவர் மதிவாணன், பொதுச் செயலாளர் ஜெயமுருகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.டூவீலர் மோதி பெண் காயம்தேனி: ரத்தினம் நகர் இளவரசி 41. இவரது தாய் சுந்தரி. இருவரும் மே 10ல் சோலைத்தேவன்பட்டியில் நடைபெறும் வீட்டு கட்டுமான வேலையை பார்த்து விட்டு இரவு 9:30 மணிக்கு ரத்தினம் நகர் திரும்பினர். ரோட்டை கடந்து நின்றிருந்த சுந்தரி மீது பெரியகுளம் ஏ.புதுப்பட்டி அருள்குமரன் 18, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் காயமடைந்த சுந்தரி, அருள்குமரன் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டுதேனி: அரண்மனைப்புதுார் கூலித்தொழிலாளி கணேசன் 30. இவருக்கு சொந்தமான டூவீலரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள உறவினர் வீட்டருகில் மே 8 இரவு 10:30 மணிக்கு நிறுத்தினார். மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு சென்று பார்த்த போது டூவீலர் காணவில்லை. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ் கண்ணாடி உடைப்பு: 20 வாலிபர்கள் மீது வழக்குதேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக கம்பம் வீரபாண்டி சிறப்பு ஸ்கள் இயக்கப்படுகிறது. மே 10 மாலை கம்பம் கிளை 2 பணிமனையில் இருந்து TN 57 N 2116 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனை முத்துராஜ் ஓட்டினார். பாண்டி கண்டக்டராக பணிபுரிந்தார். சின்னமனுாரில் 20 வாலிபர்கள் பஸ்சில் ஏறினர். பயணச்சீட்டு எடுப்பதாக மாறி மாறி கூறிக் கொண்டு கோட்டூர் வரை பயணித்தனர். கண்டக்டர் டிக்கெட் எடுக்க கூறியதற்கு சிலர் கீழே இறங்கி பின்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்தனர். படிக்கட்டு அருகே உள்ள கண்ணாடியையும் உடைத்து சென்றனர். கண்டக்டர் புகாரில் வீரபாண்டி போலீசார் 20 வாலிபர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை