மேலும் செய்திகள்
மாவட்டத்தில் டூவீலர் திருட்டு
27-Feb-2025
மூதாட்டி தற்கொலைதேனி: என்.ஆர்.டி., நகர் செல்வீஸ்வரி 72, ஓய்வு பெற்ற செவிலியர். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அதிக அளவு துாக்க மாத்திரைகளை உட்கொண்டதால் படுகையறையில் மயங்கி இருந்தவரை உறவினர் ஜெயசீலன் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வீஸ்வரி உயிரிழந்தார். ஜெயசீலன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலைதேனி: திண்டுக்கல் மாவட்டம் எல்லைபட்டி பழனிசாமி 34. தேனி க.விலக்கு அருகே சிலோன்காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்தால் மனைவி சத்யாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்யா புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்துதேனி: ஆண்டிபட்டி தெப்பம்பட்டி முருகன் 52, கூலித்தொழிலாளி. இவர் கதிர்நரசிங்கபுரத்தில் மது வாங்கி கொண்டு பாலக்கோம்பை ரோட்டில் தெப்பம்பட்டி திரும்பினார். அப்போது ஜெ.ஜெ.,காலனி அருகே வந்த போது இவரது டூவீலர் மீது தெப்பம்பட்டி ஜெயவிஸ்வா ஒட்டி வந்த டூவீலர் மோதியது. விபத்தில் காயமடைந்த முருகன் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டுதேனி: ஆண்டிபட்டி ரெங்கசமுத்திரம் ராஜ்திலக் 33, ஓட்டல் தொழிலாளி. இவர் ஆண்டிபட்டி- வைகை அணை ரோட்டில் டூவீலரில் சென்றார். சிட்கோ அருகே டூவீலரை நிறுத்தி உடல் உபாதைகளை கழித்தார். திரும்பி வந்த பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. ராஜ்திலக் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Feb-2025