உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பச்சை மிளகாய் விலை உயர்வு

பச்சை மிளகாய் விலை உயர்வு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் விளைச்சல் குறைந்ததால் உயர்ந்துள்ள பச்சை மிளகாய் விலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.ஆண்டிபட்டி அருகே வெள்ளையதேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, பெருமாள்பட்டி, மூணாண்டிபட்டி, குண்டலப்பட்டி, தருமத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களில் பச்சை மிளகாய் சாகுபடி உள்ளது. கடந்த 6 முதல் 10 மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட செடிகளில் இன்றளவும் பச்சை மிளகாய் காய்ப்பு உள்ளது. கடந்த சில மாதங்களில் விளைச்சல் படிப்படியாக குறைந்துள்ளது. தேவை அதிகரிப்பால் கிராக்கி ஏற்பட்டு பச்சை மிளகாய் விலை தொடர்ந்து உயர்கிறது.விவசாயிகள் கூறியதாவது: பச்சை மிளகாய் செடிகள் நடவு செய்யப்பட்ட இரு மாதங்களில் காய்ப்பு கிடைக்கும். செடிகளை பராமரித்து வந்தால் ஓராண்டு வரை காய்கள் பறிக்க முடியும். கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட செடிகளில் காய்ப்புத்தன்மை குறைந்துள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன் இப்பகுதியில் இருந்து தினமும் மூன்று முதல் ஐந்து டன் வரை பச்சை மிளகாய் விற்பனைக்கு அனுப்பப்படும். தற்போது தினமும் 2 டன் அளவில் கூட வரத்து இல்லை. விளைச்சல் குறைந்ததால் கடந்த சில மாதத்திற்கு முன் கிலோ ரூ.30 முதல் 40 வரை இருந்தா பச்சை மிளகாய் தற்போது கிலோ ரூ.80 வரை உயர்ந்துள்ளது. செடிகளில் பச்சை மிளகாய் பறிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியதும் பச்சை மிளகாய் நடவு அதிகமாகும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை