உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கழிவு நீருடன் வீட்டிற்குள் புகுந்த மழை நீர்

கழிவு நீருடன் வீட்டிற்குள் புகுந்த மழை நீர்

கூடலுார் : கழிவு நீருடன் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.நேற்று மாலை கூடலுாரில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் வரை பெய்த மழையால் தெருக்களில் வெள்ளம் போல் மழை நீர் சென்றது. 6வது வார்டு காலனியில் கழிவு நீருடன் கலந்து மழை நீர் பல வீடுகளுக்குள் புகுந்தது. இதனை வெளியேற்ற முடியாமல் மக்கள் திணறினர். இரவில் வீட்டிற்குள் தூங்க முடியாத நிலை ஏற்பட்டதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் புகாதவாறு கழிவு நீரோடையை ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை