உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் கொலை வழக்கில் உறவினர் கைது

பெண் கொலை வழக்கில் உறவினர் கைது

போடி:தேனிமாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவியை கொலை செய்து நகைகள் கொள்ளையடித்த வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர்.சில்லமரத்துப்பட்டி தாத்தாப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பழனிச்சாமி. இவரது மனைவி செல்லத்தாய் 55. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததில் பழனிச்சாமி கோவையில் தங்கி செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார். மூத்த மகன் ஈஸ்வரன் வெளியூரில் வசிக்கிறார். இளைய மகன் வினோத் 34, எல்லை பாதுகாப்பு படையில் உள்ளார். செல்லத்தாய் சில்லமரத்துப்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.வினோத் மூன்று நாட்களுக்கு முன் செல்லத்தாயை அலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த வினோத் உறவினரிடம் தெரிவித்தார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது செல்லத்தாய் அறையில் உள்ள மெத்தையில் இறந்து கிடந்தார்.எஸ்.பி., சிவபிரசாத், போடி டி.எஸ்.பி., பெரியசாமி, தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆய்வு செய்தனர். மெத்தையில் செல்லத்தாய் இரு கைகளும் கட்டப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. செல்லத்தாயின் உறவினர் டொம்புச்சேரியை சேர்ந்த சந்திரேஸ்வரன் 37. டிரைவர். இவர் செல்லத்தாய் வீட்டின் அருகே குடியிருந்து வந்துள்ளார். வேலைக்கு செல்லவில்லை. செல்லத்தாய் இறந்த நிலையில் சந்திரேஸ்வரன் மாயமானார்.விசாரணையில் கோவையில் பதுங்கி இருந்தது தெரிந்தது. சந்திரரேஸ்வரனை பிடித்து விசாரித்ததில் பணத்திற்காக குடிபோதையில் செல்லத்தாயை கொலை செய்து விட்டு நகைகள், வீட்டில் இருந்த டூவீலரை திருடி சென்றது தெரிந்தது. போலீசார் சந்திரேஸ்வரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி