உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டோரக் கடைகள் அகற்றம்

ரோட்டோரக் கடைகள் அகற்றம்

மூணாறு, : கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன.கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, மூணாறு, உடுமலைபேட்டை ரோடு, மாட்டுபட்டி ரோடு மற்றும் மூணாறு நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரோடு, வழியோரம் ஆகியவற்றை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவுபடி தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோட்டில் இருந்த 35க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. அனைத்து கடைகளும் படிப்படியாக அகற்றப்படும் என சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை