உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாழை ஆராய்ச்சி, மதிப்புக்கூட்டு பயிற்சி மையம் அமைக்க  கோரிக்கை பட்ஜெட்டில் அறிவிப்புக்கு  எதிர்பார்ப்பு

வாழை ஆராய்ச்சி, மதிப்புக்கூட்டு பயிற்சி மையம் அமைக்க  கோரிக்கை பட்ஜெட்டில் அறிவிப்புக்கு  எதிர்பார்ப்பு

தேனி: மாவட்டத்தில் வாழை ஆராய்ச்சி, மதிப்புக்கூட்டு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இக் கோரிக்கை தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் வேளாண் முக்கிய தொழில் ஆகும். வாழை, காய்கறிகள், பழங்கள், தென்னை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சின்னமனுார், கம்பம், போடி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வாழை 6ஆயிரத்து 515 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அதிகளவு வாழை உற்பத்தில் தேனி முதலிடம் வகித்தது. மாவட்டத்தில் ஜி9, கற்பூரவல்லி, செவ்வாழை, நேந்திரன், நாலிப்பூவன் உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் ஆண்டு தோறும் வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் சுமார் 10 டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஆனால், வாழையில் புதிய ரகங்கள் கண்டறிய ஆராய்ச்சி மையம், நோய் பாதிப்பை தடுக்கும் ஆராய்ச்சிகள், வாழையில் மதிப்புக்கூட்டும் பயிற்சி மையம் இல்லை. தமிழக வேளாண் பட்ஜெட்டில் தேனி மாவட்டத்தில் வாழை ஆராய்ச்சி, மதிப்புக்கூட்டு பயிற்சி மையம் அமைக்க அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை