உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன் விரோத தகராறில் ஓய்வு எஸ்.ஐ., ஓட்டல் சேதம்

முன் விரோத தகராறில் ஓய்வு எஸ்.ஐ., ஓட்டல் சேதம்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே சொத்து பிரச்னை தகராறு காரணமாக ஓய்வு பெற்ற எஸ்.ஐ., பாண்டி என்பவரின் ஓட்டலை சேதப்படுத்திய தம்பி பால்பாண்டி உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தேவதானப்பட்டி அருகே ஏ.வாடிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., பாண்டி 61. இவர் தேவதானப்பட்டி- பெரியகுளம் ரோட்டில் அக்சயா கார்டனுக்கு எதிரே ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கும் இவரது தம்பி பால்பாண்டிக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்தது.இந்நிலையில் பால்பாண்டி, இவரது நண்பர்கள் தங்கப்பாண்டி, மணிகண்டன், கருப்பசாமி ஆகியோர் பாண்டியை அடித்தனர். மேலும் பால்பாண்டி நண்பர்களான பிச்சைராஜ், திருமலைசாமி,பாலமுருகன், பழனியப்பன் மற்றும் பால்பாண்டி மனைவி முருகேஸ்வரி ஆகியோர் ஓட்டலுக்குள் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ