மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
14 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
14 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
17 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
17 hour(s) ago
கம்பம் : மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெங்கு காய்ச்சல் பரவி கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. சித்த மருத்துவர்கள் வழங்கிய நிலவேம்பு கசாயமே டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு தீர்வாக அமைந்தது.சுத்தமான தண்ணீரில் வளரும் ஏ.டி.எஸ்., வகை கொசுக்களால் டெங்கு ஏற்படுகிறது. டெங்கு பாதித்தால் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை குறைத்து மரணம் ஏற்படும். எனவே, வீடுகளில் தண்ணீரை சரிவர மூடாமல் வைப்பதும், நாள்பட்டு தண்ணீரை சேமித்து வைக்கும் இடங்களில் இவ்வகை கொசுக்கள் வளர காரணமாகிறது. சாக்கடையில் இந்த வகை கொசு இருக்காது. தேங்கி நிற்கும் மழை நீரில் இருக்கும். நன்னீரில் தான் இந்த வகை கொசுக்கள் இருக்கும்.கடந்த 10 நாட்களாக தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள், வீதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ளது. தற்போது மழை பெய்துள்ளதால் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே தேனி மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் தெருக்களில் பிளிச்சீங் பவுடர் போடுவது, வீடுகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்கள், தொட்டிகள் சரியாக மூடி வைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் வட்டாரங்களில் உள்ள சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம செவிலியர்களை டெங்கு தடுப்பு பணியில் முடுக்கி விடப் பட்டுள்ளனர். வீடுதோறும் தினமும் காய்ச்சல் உள்ளதா என கேட்டு வருகின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago