உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி மாணவிகளிடம் விளையாட்டு ஆர்வம் குறைவு

பள்ளி மாணவிகளிடம் விளையாட்டு ஆர்வம் குறைவு

தேவதானப்பட்டி,: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியை இல்லாததால் மாணவிகள் விளையாட்டு ஆர்வம் குறைந்துள்ளது.பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 1800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை தகுந்தவாறு உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் இல்லை. 300 மாணவ, மாணவிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் வீதம் பணி நியமனம் செய்ய அரசு உத்தரவு உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 1100 மாணவ, மாணவிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே உள்ளார். இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு உடற்கல்வி இயக்குனர், இரு பெண் உடற்கல்வி ஆசிரியைகள், கூடுதலாக ஒரு உடற்கல்வி ஆசிரியர் என 4 பணியிடம் நிரப்ப வேண்டும். ஆனால் உடற்கல்வி ஆசிரியை ஒருவர் கூட இல்லாததால் விளையாட்டுகளில் மாணவிகள் சோபிக்க முடியவில்லை. உடற்கல்வி ஆசிரியைகளை உடனடியாக நியமிக்க மாவட்ட சி.இ.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை