| ADDED : ஆக 01, 2024 05:33 AM
தேனி: அரசு பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஆக.,2ல் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்படுகிறது. இந்த குழுவின் பள்ளி மாணவர்களின் பெற்றோர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி, முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர், கல்வியாளர்கள் உட்பட 24 பேர் வரை இடம் பெற்றிருப்பர்.பள்ளிக்கு தேவையான வசதிகள், மாணவர்கள் நலன், இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது, உயர்கல்வி பற்றி ஆலேசானை வழங்குவது உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளில் இக்குழு செய்கிறது. தற்போது உள்ள குழுவின் பதவிகாலம் முடிவடைந்து விட்டது. புதிய குழு மறுகட்டமைப்பு பணி தேர்தல் மூலம் பள்ளிகளில் நடக்க உள்ளது.இதற்காக குழுபற்றியும், அதில் பெற்றோர் உறுப்பினராவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 530 பள்ளிகளிலும் ஆக.,2ல் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. என பள்ளிகல்வித்துறையினர் தெரிவித்தனர்.