உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாது வென்ற விநாயகருக்கு ரகசிய கும்பாபிஷேகம்

வாது வென்ற விநாயகருக்கு ரகசிய கும்பாபிஷேகம்

தேனி, : தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வாது வென்ற விநாயகர் கோயிலுக்கு யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் ரகசிய கும்பாபிஷேகம் நடத்தி உள்ளனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வாது வென்ற விநாயகர் கோயில் ஆற்றங்கரையில் இருந்து கவுமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. பழமையான இக் கோயில் பல ஆண்டுகளாக கடைகள் வைத்து ஆக்கிரமித்து, வெளியில் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ஹிந்து அமைப்பினர் தொடர் போராட்டத்தால், கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. நேற்று யாரிடமும் தெரிவிக்காமல் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டது.இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் மாரிமுத்துவிடம் கேட்ட போது, 'கவுமாரியம்மன் கோயில் அளவிற்கு பெரிய கோயில் இல்லை. இதனால் தெரியப்படுத்தவில்லை. கும்பாபிஷேக விழாவில் பொது மக்கள் பங்கேற்றனர்' என்றார். ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் உமையராஜன் கூறுகையில், 'வாது வென்ற விநாயகர் கோயில் பழமை வாய்ந்தது. இடிபாடுகளுடன் இருந்ததை சுட்டிகாட்டி அரசுக்கு தொடர் மனு அளித்ததன் மூலம் கோயில் திருப்பணிகள் நடந்துள்ளது. தற்போது யாருக்கும் தெரிவிக்காமல் கும்பாபிஷேகம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அறநிலையத்துறை கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் போது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை