உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுகாதாரக்கேட்டிற்கு வழிவகுக்கும் சேனை ஓடை; துார்வார நகராட்சி நடவடிக்கை தேவை

சுகாதாரக்கேட்டிற்கு வழிவகுக்கும் சேனை ஓடை; துார்வார நகராட்சி நடவடிக்கை தேவை

கம்பம் : கம்பம் நகரின் மையப்பகுதியில் உள்ள சேனை ஒடை சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதால் ஓடையை தூர்வார நகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கம்பத்தில் உள்ள சேனை ஓடை கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது. மழைகாலங்களில் வெள்ள நீர் வழிந்தோடி, முல்லைப்பெரியாற்றில் கலக்க இந்த ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாக்கடை கழிவுநீர், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிப்பறை கழிவுகள் இந்த ஓடையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. பலர் ஒடையை ஆக்கிரமித்து தங்கள் வீட்டிற்கு கழிப்பறை கட்டியுள்ளனர். கோழிக்கறி கழிவுகள்,இறைச்சி கழிவுகளை இறைச்சி கடைக்காரர்கள் கொட்டுகின்றனர். இங்கு பன்றிகளும் ஓடையில் வளர்க்கப்படுகிறது. இந்த ஓடை வழியாக நகரின் 50 சதவீத சாக்கடை கழிவுகள் வீரப்ப நாயக்கன் குளத்தை அடைந்து, சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே, ரூ.50 லட்சத்தில் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்ப அனுமதிக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டு விட்டது. சுகாதார கேட்டை ஏற்படுத்தி வரும் சேனை ஓடையை தூர்வார நகராட்சி சிறப்பு திட்டம் தயாரிக்க வேண்டும். இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அரசிடம் பெற கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும். நகரை அசுத்தப்படுத்தும் சேனை ஓடையை சுத்தப்படுத்த நகராட்சி முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ