உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவதானப்பட்டியில் தொடர் திருட்டு: வியாபாரிகள் அச்சம்

தேவதானப்பட்டியில் தொடர் திருட்டு: வியாபாரிகள் அச்சம்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே அரிசிக்கடை பஜார் வீதியில் அடுத்தடுத்து கடைகளில் திருட்டுச் சம்பவத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.தேவதானப்பட்டி அரிசி கடை முக்கியமான பஜார்வீதியாகும். அரிசிக்கடை, மளிகை கடை, நகைக்கடை, வங்கி, ஜவுளிக்கடை, ஓட்டல், டீக்கடைகள் என ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அரிசி கடை பஜாரில் பத்து நாட்களாக சைக்கிள், டூவீலர் திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடந்தது. ஆனால் தேவதானப்பட்டி போலீசார் 10 க்கும் மேற்பட்ட புகார்களை பெற்றும் வழக்கு பதிவு செய்யவில்லை.இந்நிலையில் ஜூன் 11ல் அரிசிக்கடை தெருவில் மளிகை கடையை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.2.70 லட்சத்தை திருடிச்சென்றனர். இச்சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. தேவதானப்பட்டி அல்அமீன் நகரைச் சேர்ந்த சாதிக் அலி 55. அரிசி கடை பிரிவு அருகே தாய் மளிகை கடையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.1.20 லட்சத்தை திருடி சென்றனர். அடுத்தடுத்த திருட்டினால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.தேவதானப்பட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் இரவு ரோந்து செல்வதில்லை என வியாபாரிகள், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 8 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் குற்றவாளிகளை கைது செய்யாதது வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை