சிவனம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்மாபட்டியில் சிவனம்மாள் கருப்ப சுவாமி, கன்னிமார்கள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை பூர்ணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை பூஜித்தனர். கோயிலில் இருந்து கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.கோயிலில் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.