உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீடு வழங்க கோரி போராட்டம்

வீடு வழங்க கோரி போராட்டம்

பெரியகுளம்: வடபுதுப்பட்டி குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்ட வீடுகளை தங்களுக்கு வழங்க கோரி நரிக்குறவர் இனமக்கள் பெரியகுளம் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சி பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆவணங்கள் இருந்தும் நிரந்தரமாக குடியிருக்க பலருக்கு அரசு வீடு வழங்கவில்லை.எனவே வடபுதுப்பட்டி பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை தங்களுக்கு வழங்க கோரி பெரியகுளம் தாலுகா அலுவலகம் முன்பு பாசி மணி கோர்த்தபடி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல துணை தாசில்தார் சித்ராதேவியிடம் கோரிக்கை மனு வழங்கி கலைந்து சென்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை