உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேரூராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக அட்டவணை பலகை

பேரூராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாக அட்டவணை பலகை

போடி,: தேவாரம் பஸ் ஸ்டாண்டில்இருக்க வேண்டியபஸ்கள்காலஅட்டவணைபேரூராட்சி அலுவலகத்தில் காட்சி பொருளாகஉள்ளது. இதனால்பஸ்வந்து செல்லும்நேரம் அறிய முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர்.தேவாரம் பஸ் ஸ்டாண்டில் இருந்துகம்பம், போடி,உத்தமபாளையம் மார்க்கமாக 5 பஸ்களும், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம் மார்க்கமாக 20 பஸ்களும்சென்று வருகின்றன.தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம்ரூ. 2 கோடி செலவில் 18 வணிக வளாகக் கடைகள், சுகாதார வளாகம் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டன. பல மாதங்கள் ஆகியும் திறப்பு விழா காணாமல் இருந்தது. பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வராததால் அரை கி.மீ., தூரம் நடந்து தேவாரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று பஸ் ஏற வேண்டிய நிலையில் பயணிகள் சிரமம் அடைந்தனர்.இது குறித்து 2 மாதங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாகமீண்டும் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் போக்குவரத்து துவங்கியது.இந்நிலையில் தேவாரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து போடி, குமுளி, மதுரை, கோவை, திண்டுக்கல் தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்வந்துசெல்லும் நேரம்அறிவதற்கான காலஅட்டவணை இல்லை. ஆனால் தேவாரம் பேரூராட்சி அலுவலக வளாக பகுதியில்இந்த கால அட்டவணை பயன் இன்றிவைக்கப்பட்டு உள்ளது.இதனால்பஸ்கள் புறப்படும் நேரம் குறித்து அறிய முடியாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.கால அட்டவணையை பஸ் ஸ்டாண்டில் அமைத்திட தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை