5ஆயிரம் டன் குளிர்பதன கிடங்கு அமைக்க இலக்கு
தேனி : மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்துடன் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குளிர்பதன கிடங்கு அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் மாவட்டத்தில் 5ஆயிரம் மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்க விவசாயிகள், பழவியாபாரிகள், வேளாண் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம். இக் கிடங்கு அமைக்க ஒரு மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ. 3500 மானியம் வழங்கப்பட உள்ளது. கிடங்கு அமைப்பதால் அறுவடைக்கு பின், நீண்ட நாளுக்கு பொருட் தரம் குறையாமல் சேமிக்கலாம். விளை பொருட்கள் சேமித்து விலை உயரும் போது அதனை விற்று லாபம் பெறலாம். விளைபொருளின் தரம் பாதுகாக்கப்படும். குளிர்பதன கிடங்கு அமைக்க விரும்புவோர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.