மேலும் செய்திகள்
தொழிலாளியிடம் பணம் பறித்த போலீஸ்காரர் கைது
05-Aug-2024
தேனி:தேனியில் குடிபோதையில் தகாராறு செய்து வந்த மகன் அஜித்குமாரை 27, என்பவரை அவரது தந்தை அபிமன்னன் 47, தாயார் ராஜாமணி 45 தாக்கியதில் உயிரிழந்தார்.தேனி ஜங்கால்பட்டி அபிமன்னன், ராஜாமணி தம்பதியினர். இவர்களுக்கு இருமகள்கள், ஒரு மகன். இதில் ஒரு மகள் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மற்றொரு மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். பெற்றோர் மகன் அஜித்குமாருடன் வசித்து வருகின்றனர். மூவரும் தோட்டங்களில் கூலி வேலை செய்து வந்தனர். அஜித்குமார் போதைபழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதனால் பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்தார். இந்நிலையில் நேற்று பணம் கேட்டு நடந்த தகராறில் பெற்றோரை தாக்கினார். கோபமடைந்த பெற்றோர் மகனை குச்சியால் தாக்கியதில் சம்பவ இடத்திலே அஜித்குமார் பலியானார். வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்றோரை கைது செய்தனர்.
05-Aug-2024