உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜல்ஜீவன் திட்டம் ஊராட்சியில் ஒப்படைக்காததால் பயன்பாட்டிற்கு வராத அவலம் குரும்பர்பாளயைம் காலனி மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு

ஜல்ஜீவன் திட்டம் ஊராட்சியில் ஒப்படைக்காததால் பயன்பாட்டிற்கு வராத அவலம் குரும்பர்பாளயைம் காலனி மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு

தேவதானப்பட்டி: ஜல்ஜீவன் திட்ட பணிகள் நிறைவு பெற்று ஊராட்சிக்கு ஒப்படைக்காததால் பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் திட்டம் முடங்கியுள்ளதாக குடிநீர் தட்டுப்பாட்டில் தவிப்பதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி ஊராட்சி 12 வது வார்டு குரும்பர்பாளையம் காலனியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு விவசாயமே பிரதான தொழில். இப் பகுதியில் சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மாதத்திற்கு ஒரு முறை தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ளி செல்கின்றனர். இதனால் கொசுக்கடியால் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இங்கிருந்து 2 கி.மீ., தூரம் வேல்நகர், பெரியகுளம் தேவதானப்பட்டி இணைப்பு ரோடுக்கு செல்வதற்கான ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் இங்கிருந்து கல்லூரி, பள்ளி மாணவர்கள் டூவீலர், சைக்கிளில் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். ரோடு சேதமடைந்துள்ளதால் இந்தப்பகுதிக்கு ஆட்டோ வர மறுக்கிறது. எண்டப்புளி ஊராட்சி அலுவலகம் 6 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஆனால் அருகில் உள்ள அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி 100 மீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது. இக் காலனி பகுதியை அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சியுடன் இணைக்க வேண்டும் என கிராமசபை கூட்டங்களில் பலமுறை வலியுறுத்தியும் அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சியுடன் இணைக்க வில்லை.தினமலர் நாளிதழின் குடியிருப்போர் பகுதிக்கு அப்பகுதியில் வசிக்கும் ஞானசிகாமணி, பந்தானம்மா, சத்தியப்பிரியா, காயத்திரி, வனிதா ஆகியோர் பேசியதாவது: ஊரக வேலை உறுதி திட்டத்தில் எண்டப்புளி ஊராட்சி அழகர்நாயக்கன்பட்டி பெரியசாமி வீடு முதல் ராமர் வீடு வரை ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதியுடன் பேவர் பிளாக் அமைத்தல், இதே போல் இதே திட்டத்தில் கண்ணன் வீடு முதல் பால்பாண்டி வீடு வரை வடிகால் வசதியுடன் பேவர் பிளாக் அமைக்கும் திட்டம் இரு பகுதிகளிலும் 75 சதவீத பணி முடிந்த நிலையில் ஒவ்வொரு பகுதியிலும் தலா 100 மீட்டர் தூரத்திற்கு பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்படாமல் உள்ளது. ஊருக்கு நடுவே மழை காலங்களில் வேல்நகர் கரட்டிலிருந்து 'காட்டுவாரி தண்ணீர்' செல்லும் ஓடை சிறுகுளம் வாய்க்காலில் கலக்கிறது. இந்த ஓடை பராமரிப்பில்லாமலும், புதர் மண்டியுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் வரும் நிலை உள்ளது. தேவதானப்பட்டி, பெரியகுளத்திலிருந்து வரும் சில சமூக விரோதிகள் பைபாஸ் ரோட்டில் ரெய்டு செய்யும் போலீசாரிடம் தப்பித்து செல்வதற்காக அழகர்நாயக்கன்பட்டி வேல்நகர் ரோட்டில் மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை பரிமாற்றம் நடக்கிறது. இதனால் ஊர் நடுவே சிசிடிவி கேமரா அமைத்து சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப் பகுதிக்கு தேவையான குடிநீர் நெடுங்குளத்தில் ஆழ்துளை குழாய் அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இவை போதுமானதாக இல்லை . இரு நாட்களுக்கு ஒரு முறை குறைந்த அளவு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. கோடைகாலம் துவங்கிய நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.8.04 லட்சம் மதிப்பீட்டில் நெடுங்குளம் அய்யனார் கோயில் அருகே ஆழ்துளை குழாய் அமைத்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டியில் ஏற்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும். திட்ட பணிகள் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் திட்டம் ஊராட்சிக்கு ஒப்படைக்காததால் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்தி ஜல்ஜீவன் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எங்கள் பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக ஊரின் மையப்பகுதியில் ஆண்கள், பெண்களுக்கான சுகாதார வளாகமும் தண்ணீர் வசதி இன்றி பயன்பாடின்றி சேதமடைந்துள்ளது. ஊராட்சிக்கும், குரும்பார்பளையம் காலனிக்கும் 6 கி.மீ., துாரம் உள்ளதால் இக் காலனி புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை