உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட தடகள வீரர்கள் தேர்வு ஆக.24ல் நடக்கிறது

மாவட்ட தடகள வீரர்கள் தேர்வு ஆக.24ல் நடக்கிறது

தேனி : மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க, மாவட்ட அளவில் வீரர்கள் தேர்வு ஆக.,24ல் முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.இதில் பங்கேற்போர் ஆதார் நகல், வயது சான்றிதழ், பள்ளி, கல்லுாரிகளில் படிப்பதற்கான சான்றுகளுடன் வரவேண்டும். தேர்வாகும் வீரர்கள் ஈரோட்டில் செப்., 20 முதல் 22வரை நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.போட்டிகள் 11, 16, 18, 20 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடக்கிறது. இதில் மும்முறை தண்டுதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் மாவட்ட தடகள நிர்வாகிகளை 99940 67184 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தடகள செயலாளர் அஜய் கார்த்திக் ராஜா தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி