உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 7ல் துவக்கம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 7ல் துவக்கம்

தேனி:தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 7 ல் துவங்குகிறது.இக்கோயில் சித்திரை திருவிழா தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது. இதற்கு ஏப்.,17ல் திருக்கம்பம் நடும் விழா நடந்தது. தினமும் பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீர் சுமந்து வந்து திருக்கம்பத்திற்கு ஊற்றி வழிபடுகின்றனர்.இங்கு சித்திரை திருவிழா மே 7 ல் துவங்கி தினமும் அலங்காரத்தில் அம்மன் புறப்பாடு நடைபெறும்.முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 10 மாலை துவங்குகிறது. மே13ல் தேர் நிலைக்கு திரும்புகிறது. மே 14ல் ஊர் பொங்கலுடன் நிறைவு பெறுகிறது. இத் திருவிழா நாட்களில் இரவு, பகலாக ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை, பொங்கல், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை, திண்டுக்கல்லில் இருந்து வீரபாண்டிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ