உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி சுணக்கம் மின்வாரியம் நடவடிக்கை தேவை

துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி சுணக்கம் மின்வாரியம் நடவடிக்கை தேவை

கம்பம் : காமயகவுண்டன்பட்டி, சின்னமனுார் உள்பட பல ஊர்களில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி சுணக்கமாக நடப்பதால் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனி மின்பகிர்மான வட்டத்தில் வண்ணாத்திப்பாறை, கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன் கோட்டை, ராசிங்காபுரம், சின்ன ஒவுலாபுரம், காமாட்சி புரம், அன்னஞ்சி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி உள்பட பல ஊர்களில் துணை மின் நிலையங்கள் உள்ளன. மின்விநியோகத்தை உரிய அழுத்தத்திலும், தடங்கலின்றியும் சப்ளை செய்ய துணை மின் நிலையங்கள் பயன்படுகின்றன.மாவட்டத்தில் சின்னமனுாரில் துணை மின் நிலையம் அமைக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சின்ன ஒவுலாபுரம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைத்த வாரியம், சின்னமனுார் நகராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதே அதற்கான காரணம்.அதேபோல அனுமதி வழங்கி, இடம்தேர்வு முடிந்து பல ஆண்டுகளை கடந்தும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியிலும் துணை மின் நிலையம் அமைப்பதில் மின்வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் உள்ளனர். மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க மக்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை