உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சொத்து தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி

சொத்து தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி

ஆண்டிபட்டி : க.விலக்கு அருகே வில்லானியாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் 50, இவரது தம்பி ஜெயபால் 39, இவர்களுக்கு வைகை ஆற்றப்படுகையில் விவசாய நிலம் உள்ளது. தந்தை இறந்தபின் நிலம் பிரிக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் டிராக்டருடன் நிலத்தை உழுவதற்கு சென்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வம் தடுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயபால் தன்னிடம் இருந்த அரிவாளை எடுத்து செல்வத்தை தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. தடுக்கச் சென்ற செல்வம் மகன் விக்னேஸ்வரன் 24, காயம் அடைந்தார். செல்வம் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை