| ADDED : ஜூன் 21, 2024 05:03 AM
தேனி: அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் விற்பனைக்காக 2 கார்களில் பதுக்கி வைக்கப்பட்ட 37 கிலோ புகையிலையும் இருகார்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.மாவட்டத்தில் கஞ்சா,போதைப் பொருட்கள், புகையிலை விற்பனையை தடுக்க எஸ்.பி., சிவபிரசாத் தனிப்படை அமைத்து தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அல்லிநகரம் வி.எம்.,சாவடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ரெங்கராஜ் 49, கார் ஓட்டிவந்தார். காரை சோதனையிட்ட போது அதில் 825 பாக்கெட் கொண்ட ஒரு மூடை புகையிலை இருந்தது. தொடர் விசாரணையில், இதே பகுதியில் மற்றொரு காரில் 110 புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய 2 மூடைகள் இருந்ததை கைப்பற்றினர். மொத்தம் ரூ.37 கிலோ புகையிலை இதன் மொத்த மதிப்பு ரூ. 19,800. இரு கார்களையும் பறிமுதல் செய்து ரெங்கராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.