உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கிய கடைக்கு சீல்

புகையிலை பதுக்கிய கடைக்கு சீல்

தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.1.29 லட்சம் மதிப்பிலான புகையிலை பதுக்கிய மளிகை கடைக்கு உணவுப்பாதுகாப்புத்துறையினர் 'சீல்' வைத்து, ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர்.தேனி சிவாஜி நகரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஒரு வீட்டின் அருகே ஆட்டோவில் பொருட்களை ஏற்றி கொண்டிருந்த கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனி அன்பு செல்வம் 27, தப்பி ஓடினார். ஆட்டோவை சோதனை செய்த போது அதில் இருந்து புகையிலை பொருட்கள் இருந்தன. கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான வீட்டினை சோதனை செய்த போது 13 மூட்டைகளில் 205 கிலோ எடையிலான ரூ. 1.29 லட்சம் மதிப்பிலான புகையில் பொருட்கள் கைப்பற்றபட்டன.தொடர்ந்து ஆடடோ டிரைவர் அன்புசெல்வம், வீட்டு உரிமையாளர் கருப்பசாமி 45, மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிரைவரை போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் பிடிபட்டதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் உதயகுமார் உணவுப்பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.கருப்பசாமிக்கு சொந்தமான புது பஸ் ஸ்டாண்ட் எதிரே செயல்படும் மளிகை கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ், போலீசார் இணைந்து 'சீல்' வைத்து கடை முன் நோட்டீஸ் ஒட்டினர். கடை உரிமையாளருக்கு ரூ. 25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.ஆண்டிபட்டி: கடமலைக்குண்டை சேர்ந்தவர் வெயிலுமுத்து 38, தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பார்க்கட்டுகள் விற்பனை செய்து வந்தார். எஸ்.ஐ., முஜிபுர் ரஹ்மான் மற்றும் போலீசார் சோதனையில் கடையில் இருந்த 30 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை